×

கிருஷ்ணகிரியில் வெள்ளரிக்காய் விற்பனை மந்தம்: விவசாயிகள் வேதனை..!!

கிருஷ்ணகிரி: கோடைகாலத்தில் அதிகமாக விற்பனையாக வேண்டிய வெள்ளரிக்காய் சுட்டெரிக்கும் வெயிலிலும் விற்பனை மந்தமாக உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராயக்கோட்டை, சூலக்கோட்டை, அயர்னப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 300 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் வெள்ளரி பயிரிட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு பெய்த மழையால் வெள்ளரிக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளதால் இருமடங்காக விலை சரிந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரூ.30கு விற்பனை செய்யப்பட்ட வெள்ளரிக்காய் தற்போது ரூ.4 க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் அறுவடை கூலி கூட வருவாய் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கோடை காலத்தில் அதிகமாக விற்பனை ஆக வேண்டிய வெள்ளரிக்காய் சுட்டெரிக்கும் வெயிலிலும் விலை வீழ்ச்சி காரணமாக விற்பனை மந்தமாக உள்ளதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

The post கிருஷ்ணகிரியில் வெள்ளரிக்காய் விற்பனை மந்தம்: விவசாயிகள் வேதனை..!! appeared first on Dinakaran.

Tags :
× RELATED சென்னையில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை...