×
Saravana Stores

கோயம்பேட்டில் பூக்கள் விலை குறைந்தது

சென்னை: சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ஒணம் பண்டிகையை முன்னிட்டு நேற்றுமுன்தினம்அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்தது. இதில், ஒரு கிலோ மல்லி ரூ.800க்கும், ஐஸ் மல்லி ரூ.700க்கும், கனகாம்பரம் ரூ.1000க்கும், ஜாதி மல்லி மற்றும் முல்லை ரூ.600க்கும், சாமந்தி ரூ.100க்கும், சம்பங்கி ரூ.240க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.160க்கும், பன்னீர் ரோஸ் ரூ.80க்கும், வாடாமல்லி ரூ.200க்கும், அரளி பூ ரூ.120க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், முகூர்த்த நாட்கள் முடிந்ததால் நேற்று காலை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை சற்று குறைந்து உள்ளது. மல்லி ரூ.900க்கும், ஐஸ் மல்லி ரூ.750க்கும், கனகாம்பரம் ரூ.800க்கும், முல்லை மற்றும் ஜாதி மல்லி ரூ.500க்கும், சாமந்தி ரூ.60க்கும், சம்பங்கி ரூ.220 க்கும் சாக்லேட் ரோஸ் ரூ.140 க்கும், பன்னீர் ரோஸ் ரூ.50 க்கும், அரளி பூ ரூ.100 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் முகூர்த்த நாட்கள் முடிந்ததால் நேற்று காலை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை குறைந்து உள்ளது இன்று மீண்டும் அனைத்து பூக்களின் விலை படிப்படியாக மேலும் குறையும் என எதிபாக்கப்படுகிறது.

The post கோயம்பேட்டில் பூக்கள் விலை குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,CHENNAI ,Chennai Koyambedu ,Onam festival ,
× RELATED உடைந்த பாலத்தால் மக்கள் தவிப்பு