×

கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் காலநிலை மாற்றத்தால் கடும் குளிர்

கோத்தகிரி : கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு சாரல் மழையுடன் கூடிய பனிமூட்டம் சூழ்ந்த குளிர் காலநிலை நிலவியது.கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே சாரல் மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவு முதல் கோத்தகிரி, கீழ் கோத்தகிரி, கொடநாடு, கட்டபெட்டு, ஒரசோலை, அரவேனு உள்ளிட்ட பகுதியில் சாரல் மழையுடன் கூடிய பனிமூட்டம் சூழ்ந்த காலநிலை நிலவியது.

இந்த நிலையில் தொடர்ந்து நேற்று காலை முதலே அவ்வப்போது மிதமானது முதல் சாரல் மழை பெய்ததால் கோத்தகிரியில் இருந்து உதகை, குன்னூர், மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதை மற்றும் நகர் பகுதிகளில் பனிமூட்டம் சூழ்ந்த காலநிலை நிலவியது. இதனால் கடும் குளிர் நிலவுவதோடு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்படைந்தது. மலைப்பாதையில் பனிமூட்டம் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகள் எரியவிட்டவாறு இயக்கி சென்றனர்.

The post கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் காலநிலை மாற்றத்தால் கடும் குளிர் appeared first on Dinakaran.

Tags : Kotagiri ,
× RELATED கோத்தகிரி சுற்று வட்டாரத்தில்...