×

கொடைக்கானலை சுற்றிப்பார்க்க ரூ.150 போதும்: சுற்றுலாப் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்க அரசு போக்குவரத்து கழகம் திட்டம்

திண்டுக்கல்: கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தளங்களை சுற்றி பார்க்க ரூ.150-யில் பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் புதிய திட்டத்தை அரசு போக்குவரத்து கழகம் தொடங்கியுள்ளது. இந்த திட்டம் சுற்றுலா பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மலைகளின் இளவரசி என வர்ணிக்கப்படும் கொடைக்கானலின் இயற்கை எழில் கொஞ்சும் அழகை ரசிக்க ஆண்டுதோறும் பல லட்ச சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

சீசன் களங்களில் வரும் சுற்றுலா பயணிகளின் முக்கிய பிரச்சனையாக இருப்பது தாங்கும் அறைகளும், நகரின் முக்கிய இடங்களை சுற்றி பார்க்க போதுமான வாகன வசதி இல்லாததும் தான். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த வாகனங்களுடன் கொடைக்கானலுக்கு வருவதால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கிறது. பொருளாதார செலவுடன் நேரமும் விரயமாவதால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இந்நிலையில், பொது போக்குவரத்து உதவியுடன் ரூ.150-க்கு கொடைக்கானலை சுற்றுப்பார்க்கும் விதமாக புதிய திட்டத்தை அரசு போக்குவரத்து கழகம் தொடங்கியுள்ளது. அதன்படி கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பி அப்பர் லேக் வியூ, மோயர் பாயிண்ட், பைன் பாரஸ்ட், குணா குகை, தூண் பாறை, பசுமை பள்ளத்தாக்கு, பிரையண்ட் பூங்கா வழியாக ஏரியில் சுற்றுலா பயணிகளை இறக்கி விடுகிறது. இதற்காக பெரியவர்களுக்கு ரூ.150-யும், சிறியவர்களுக்கு ரூ.75-யும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இதற்கு சுற்றுலா பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகைக்கு ஏற்பவும், தேவைக்கேற்பவும் பேருந்து இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் தெரிவித்துள்ளார். தற்போது கோடை காலத்தில் மட்டுமே இந்த சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கொடைக்கானலை சுற்றிப்பார்க்க ரூ.150 போதும்: சுற்றுலாப் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்க அரசு போக்குவரத்து கழகம் திட்டம் appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,State Transport Corporation ,Dindigul ,Government Transport Corporation ,Dinakaran ,
× RELATED யானைகள் புகுந்து அதகளம் பேரிஜம் ஏரிக்கு செல்ல மீண்டும் தடை