×

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உரிய வசதி ஏற்படுத்தி தர வேண்டும்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தல்

சென்னை: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வரும் காலங்களில் அதிகரிக்கும் போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டும் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கிருந்து நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய தென்மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் சென்னையின் மற்ற பகுதிகளில் இருந்து அங்கு செல்ல பேருந்து வசதிகள் இல்லை. கிளாம்பாக்கம் வந்து சேரும் வெளியூர் பயணிகளும் சென்னை நகருக்குள் செல்ல சிரமப்படுகின்றனர். நூற்றுக்கணக்கான ரூபாய் கொடுத்து கார் மற்றும் ஆட்டோக்களில் பயணம் செய்கின்றனர்.

இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேறும் பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சர்வீஸ் சாலை வழியாக பேருந்துகள் இயக்கப்படுவதால் சிரமம் ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பிரச்னைகள் வரும் பொங்கலுக்குள் சரி செய்யப்படும் என அமைச்சர்கள் கூறுகின்றனர். மாநகர பேருந்து நிறுத்தத்துக்கும், அங்கிருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படும் பகுதிக்கும் எளிதாக பயணிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு உடனடியாக உரிய வசதிகளை செய்து தர வேண்டும்.

The post கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உரிய வசதி ஏற்படுத்தி தர வேண்டும்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Clambakkam bus station ,Union Minister ,L. Murugan ,CHENNAI ,Klambach ,Nellai ,Nagercoil ,Thoothukudi ,Kanyakumari ,Madurai ,Ramanathapuram ,Klambakkam bus station ,Dinakaran ,
× RELATED மனதின் குரல் நிகழ்ச்சியின் வாயிலாக...