சென்னை: சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக ருதுராஜ், கான்வே களமிறங்கினர். ருதுராஜ் 17 ரன் எடுத்து வருண் சுழலில் அரோரா வசம் பிடிபட்டார். அடுத்து வந்த ராயுடு 16 ரன் எடுத்து வெளியேற, கான்வே 30 ரன் (28 பந்து, 3 பவுண்டரி) விளாசி ஷர்துல் வேகத்தில் விக்கெட்டை இழந்தார். ராயுடு 4 ரன், மொயீன் 1 ரன் மட்டுமே எடுத்து நரைன் வீசிய 11வது ஓவரில் அடுத்தடுத்து கிளீன் போல்டாக, சென்னை 72 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது.இந்த நிலையில், துபே – ஜடேஜா இணைந்து 6வது விக்கெட்டுக்கு 68 ரன் சேர்த்தனர்.
ஜடேஜா 20 ரன் எடுத்து அரோரா பந்துவீச்சில் வருண் வசம் பிடிபட்டார். சிஎஸ்கே 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்தது. துபே 48 ரன் (34 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்), தோனி 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கொல்கத்தா பந்துவீச்சில் வருண், நரைன் தலா 2, அரோரா, ஷர்துல் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 18.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதிகபட்சமாக நிதிஷ் ராணா 57 ரன் ( 44 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினார். ரிங்கு சிங் 54 ரன் எடுத்தார். சென்னை பந்துவீச்சில் தீபக் சாகர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 13 போட்டியில் 6 வது வெற்றியை பதிவு செய்து பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்கவைத்தது.
The post சூப்பர் கிங்சுக்கு எதிராக அசத்தலாக வென்றது கேகேஆர் appeared first on Dinakaran.