×

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதியை உறுதி செய்யக்கோரி மனு; அரசு பதில் தர ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதியை உறுதி செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியை ஏற்படுத்தும் வரை பணி முடிப்பு சான்றிதழ் வழங்க தடை விதிக்க மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. பேருந்து நிலையத்தின் தளம் வழுக்கும் தன்மையுடன் அமைக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் புகார் தெரிவித்திருந்தார்.

The post சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதியை உறுதி செய்யக்கோரி மனு; அரசு பதில் தர ஐகோர்ட் ஆணை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Clambakkam bus station ,ICourt ,Chennai ,Tamil Nadu government ,Chennai Klampakkam bus station ,
× RELATED திருமணம் செய்யாமல் சேர்ந்து...