பராக்: அமெரிக்காவில் காலிஸ்தான் தீவிரவாதி பன்னூனை கொலை செய்வதற்கு இந்திய அதிகாரியுடன் இணைந்து முயன்றதாகவும், இதற்காக ஒருவரை வாடகைக்கு நியமித்ததாகவும் இந்தியரான நிதில் குப்தா மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் 30ம் தேதி செக் குடியரசில் நிகில் குப்தா கைது செய்யப்பட்டார் அவரைஅமெரிக்காவிற்கு நாடு கடத்துவதற்கு கீழமை நீதிமன்றம் அளித்த அனுமதியை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த விவகாரத்தில் நீதித்துறை அமைச்சர் பவேல் பிளாஸ்க், அமெரிக்காவிடம் நிகில் குப்தா ஒப்படைக்கப்படுவாரா என்பதில் இறுதி முடிவு எடுப்பார் என்று கூறப்படுகின்றது. இது தொடர்பாக அவர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் பின்னர் இது குறித்து முடிவு எடுப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே நிகில் குப்தாவின் வழக்கறிஞர் அரசியலமைப்பு நீதிமன்றத்தில் புகார் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
The post காலிஸ்தான் தீவிரவாதியை கொல்ல முயற்சி இந்தியரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த அனுமதி: செக் குடியரசு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.