×

கேரளாவில் மேலும் ஒரு சினிமா டைரக்டர் பாஜவிலிருந்து விலகல்

திருவனந்தபுரம்: கேரளாவில் பிரபல சினிமா டைரக்டர் ராமசிம்மன் அபூபக்கர் பாஜவிலிருந்து விலகினார். இதையடுத்து சமீபத்தில் இக்கட்சியிலிருந்து விலகிய சினிமா பிரபலங்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

கேரளாவில் பாஜவிலிருந்து விலகி ஏராளமானோர் மாற்றுக் கட்சிகளில் சேர்ந்து வருகின்றனர். சமீப காலமாக இதே போல இக்கட்சியில் இருந்து விலகும் சினிமா பிரபலங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மலையாள சினிமாவில் முன்னணி டைரக்டர்களில் ஒருவரான ராஜசேனன் கடந்த மாதம் பாஜவிலிருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்.

பாஜ மாநிலக் கமிட்டி உறுப்பினராக இருந்த இவர், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பாஜவில் இருந்தபோது பல துன்பங்களை சந்தித்ததாகவும், இக்கட்சியில் கலைஞர்களுக்கு எந்த மரியாதையும் கிடையாது என்றும் ராஜசேனன் கூறினார். இந்நிலையில் மலையாள சினிமாவில் பழம்பெரும் வில்லன் நடிகரான பீமன் ரகுவும் பாஜவிலிருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்.

இதற்கு அடுத்தபடியாக தற்போது மலையாள சினிமாவில் பிரபல டைரக்டரான ராமசிம்மன் அபூபக்கர் கட்சியிலிருந்து விலகியுள்ளார். முகமுத்ரா, பொன்னுச்சாமி, பை பிரதர்ஸ், 1921 புழ முதல் புழ வரே, ஜூனியர் மாண்ட்ரேக், குடும்ப வார்த்தகள் உள்பட ஏராளமான படங்களை இவர் டைரக்ட் செய்துள்ளார்.

பாஜவிலிருந்து விலகிய விவரத்தை இவர் தன்னுடைய முகநூலில் குறிப்பிட்டுள்ளார். தேர்தலுக்கு மட்டுமே கலைஞர்களை பாஜ பயன்படுத்துகிறது. இக்கட்சியில் கலைஞர்களுக்கு மரியாதை கிடையாது என்றும், வேறு கட்சியில் சேருவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post கேரளாவில் மேலும் ஒரு சினிமா டைரக்டர் பாஜவிலிருந்து விலகல் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Baja ,Thiruvananthapuram ,Ramasimman Abubakar ,
× RELATED ஏழைகளுக்கு இடத்தை வழங்கினால் கடவுளே...