×
Saravana Stores

கேரளாவில் 4 நாட்களுக்கு பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம்:கேரளாவில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்யத் தொடங்கியுள்ளது. அடுத்த 4 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.நேற்று பத்தனம்திட்டா, எர்ணாகுளம் உள்பட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருவனந்தபுரம் கொல்லம் உள்பட 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு கேரளாவில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பத்தனம்திட்டா, எர்ணாகுளம், ஆலப்புழா, திருச்சூர் மற்றும் இடுக்கி ஆகிய 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 30 கிமீ முதல் 50 கிமீ வரை வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கேரளாவில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் வெப்பத்தின் தாக்கம் ஓரளவு குறைந்துள்ளது.

The post கேரளாவில் 4 நாட்களுக்கு பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,
× RELATED கேரள மாநிலம் பாலக்காடு அருகே காரும்,...