×

கர்நாடகாவிடம் இருந்து தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை பெற்று தர ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கர்நாடக துணை முதல்வர் மேகதாது அணை கட்டுவது குறித்தும், காவிரி நீரை தருவது குறித்தும் முரண்பாடாக பேசுவதும், செயல்படுவதும் தமிழ்நாட்டு விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயல். எனவே, தமிழ்நாடு அரசு இனியும் பொறுமை காக்காமல் தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீரைப் பெற்றுத் தர உறுதியான செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். தமிழ்நாடு அரசு, மேகதாது அணை விவகாரத்தில் உறுதியான செயல்பாட்டை மேற்கொண்டு தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீரைப் பெற வேண்டும். மேகதாது அணை, காவிரி நீர் ஆகியவற்றில் தமிழ்நாட்டு மக்களும், தமிழ்நாடு தான் முக்கியம் என்பதை உறுதி செய்து கொண்டு, தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்.

The post கர்நாடகாவிடம் இருந்து தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை பெற்று தர ஜி.கே.வாசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : GK ,Vasan ,Karnataka ,Tamil Nadu ,CHENNAI ,Tamaka ,GK Vasan ,Deputy Chief Minister ,Meghadatu ,Dinakaran ,
× RELATED சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும்: ஜி.கே.வாசன், டிடிவி வலியுறுத்தல்