×

கர்நாடக அரசு மீது காங். எம்எல்ஏ குற்றச்சாட்டு; பணம் கொடுத்தால் தான் வீடு ஒதுக்கி தருகிறார்கள்

பெங்களூரு: கர்நாடகா மாநில காங்கிரஸ் எம்எல்ஏ பிஆர் பாட்டீல். இவர் காங்கிரஸ் அரசு மீது குற்றம் சாட்டினார். அவர் கூறும்போது, ‘கர்நாடகாவில் பணம் வழங்கியவர்களுக்கு மட்டும் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பாஜ ஆட்சியின் போது ஊழல்கள் நடந்தன. தற்போது அதுபோல் நடந்து வருகிறது’ என்றார். இதற்கு துணை முதல்வர் டிகேசிவகுமார் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு வெளிப்படையாக நடைபெறுகிறது. ஆனால், பிஆர் பாட்டீல் எம்எல்ஏ கூறியிருப்பது தவறாகும். பிஆர் பாட்டீல் ஆதாரம் இருந்தால் அதை முதல்வர் சித்தராமையாவிடம் அளித்து இருக்க வேண்டும் ’ என்றார்.

The post கர்நாடக அரசு மீது காங். எம்எல்ஏ குற்றச்சாட்டு; பணம் கொடுத்தால் தான் வீடு ஒதுக்கி தருகிறார்கள் appeared first on Dinakaran.

Tags : Kang ,Government of Karnataka ,MLA ,Bangalore ,Karnataka State Congress ,PR ,Patil ,Congress ,Karnataka ,Baháza ,Karnataka Government ,Dinakaran ,
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி