பெங்களூரு: கர்நாடக மாநிலம் சிக்கபள்ளபூர் அருகே நடந்த சாலை விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். சித்ராவதி அருகே சிமெண்ட் ரெடிமிக்ஸ் லாரி மீது டாடா சுமோ மோதியதில் 12 பேர் பலியாகினர். பனிமூட்டம் காரணமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த ரெடிமிக்ஸ் லாரி, டாடா சுமோ ஓட்டுனருக்கு தெரியவில்லை. விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
The post கர்நாடக மாநிலம் சிக்கபள்ளபூர் அருகே நடந்த சாலை விபத்தில் 12 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.
