×

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் பாஜவில் 40 நட்சத்திர பேச்சாளர்கள்: பிரதமர் மோடி 20 இடங்களில் பிரசாரம்

பெங்களூரு: கர்நாடகா தேர்தல் பிரசாரத்திற்காக 40 பேர் கொண்ட நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை பாஜ தலைமை வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி 20 இடங்களில் பிரசாரம் செய்கிறார். கர்நாடகாவில் வரும் மே 10ம் தேதி சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பாஜ தனது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இன்னும் 2 தொகுதிக்கு மட்டுமே வேட்பாளர்கள் அறிவிப்பு பாக்கியுள்ளது. மீண்டும் ஆட்சியை தக்கவைப்பதற்காக பல்வேறு வியூகங்களை பாஜ வகுத்து வந்தாலும் கூட, கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் சீட் கிடைக்காத விரக்தியில் மாற்றுக் கட்சிக்கு தாவி வருகின்றனர். இந்நிலையில் கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பதற்காக 40 பேர் கொண்ட நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை நேற்று கட்சித் தலைமை வெளியிட்டுள்ளது. அதன்படி, பிரதமர் மோடி 20 இடங்களில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய தலைவர் ஜேபி நட்டா, ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி உள்ளிட்டோரும், மாநில முதல்வர்களில் யோகி ஆதித்ய நாத், சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோரும், மாநில தலைவர்கள் பட்டியலில் தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும், பொதுச்செயலாளர்கள் உள்ளிட்டோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, சதானந்தகவுடா உள்ளிட்டோரும் நட்சத்திர பிரசார பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

The post கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் பாஜவில் 40 நட்சத்திர பேச்சாளர்கள்: பிரதமர் மோடி 20 இடங்களில் பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Karnataka Assembly Election Baja ,PM Modi ,Bangalore ,Baja ,Karnataka ,Election Baja ,
× RELATED ரெமல் புயல் முன்னெச்சரிக்கை...