×

காராமணி பீட்ரூட் கட்லெட்

தேவையானவை:

சிவப்பு காராமணி – 200 கிராம் (வேகவைத்தது),
பீட்ரூட் – 200 கிராம் (துருவியது),
உருளைக்கிழங்கு – 200 கிராம் வேகவைத்தது,
வெங்காயம் – 100 கிராம்,
இஞ்சி – 1 துண்டு,
பச்சைமிளகாய் – 8,
சோம்பு – 1 ஸ்பூன்,
உப்பு சுவைக்கு,
அரிசி மாவு – 100 கிராம்,
எண்ணெய் – 150 கிராம்.

செய்முறை:

காராமணியுடன் இஞ்சி, பச்சைமிளகாய், சோம்பு, உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும். அதில் அரிந்த வெங்காயம், துருவிய பீட்ரூட், மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து பிசைந்து வேண்டிய வடிவத்தில் தட்டி, அரிசி மாவில் பிரட்டி தவாவில் எண்ணெய் விட்டு பொன்னிறமாக இரண்டு பக்கமும் சுட்டு எடுத்தால் சுவையான பீட்ரூட் காராமணி கட்லெட் ரெடி.

The post காராமணி பீட்ரூட் கட்லெட் appeared first on Dinakaran.

Tags :
× RELATED நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்கள்