×

கன்னியாகுமரிக்கு கூடுதல் ரயில் திட்டங்கள்: மக்களவையில் விஜய்வசந்த் வலியுறுத்தல்

சென்னை: மக்களவை கூட்டத்தில், 377வது விதியின்கீழ் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களுக்கான விவாதத்தில் கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி விஜய்வசந்த் பங்கேற்றார். அப்போது அவர், பிரபல சுற்றுலா தலமான குமரி மாவட்டத்தில் தேவைகளுக்கேற்ப போதிய ரயில் வசதிகள் இல்லை. இங்கிருந்து வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்கு செல்லும் மக்களின் நலன் கருதி தினசரி ரயில் சேவை விட வேண்டும். வேளாங்கண்ணிக்கு வாராந்திர ரயில் விட வேண்டும். எங்கள் பகுதி மக்களின் தேவையை கருத்தில் கொண்டு, திருவனந்தபுரத்தில் இருந்து மதுரைக்கு மெமு ரயிலை இயக்க வேண்டும். கன்னியாகுமரில் இருந்து ஐதராபாத் மற்றும் சென்னைக்கு வந்தேபாரத் ரயிலை ஒதுக்க வேண்டும்.

மேலும், எங்கள் பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களை தரம் உயர்த்தும் வகையில், நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதன் உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டும். 4 வழிச்சாலையை ரயில் நிலையத்துடன் இணைக்கும் வகையில், ஒரு இணைப்பு சாலையை ஏற்படுத்தி தரவேண்டும். திருவனந்தபுரம்-நாகர்கோவில் இட்டை ரயில்பாதை திட்டத்தை துரிதப்படுத்தி நிறைவு செய்ய வேண்டும். இதன்மூலம் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இயலும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி, அதற்கான மனுக்களை சம்பந்தப்பட்ட ஒன்றிய ரயில்வே துறை அமைச்சரிடம் சமர்ப்பித்தார்.

The post கன்னியாகுமரிக்கு கூடுதல் ரயில் திட்டங்கள்: மக்களவையில் விஜய்வசந்த் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Vijayvasant ,Lok Sabha ,CHENNAI ,Kanyakumari Congress ,Kumari ,Vellore CMC Hospital ,Dinakaran ,
× RELATED நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து...