×

கண்ணமங்கலம் அருகே டிரோன் கேமரா மூலம் சாராய வேட்டை

*டிஎஸ்பி பங்கேற்பு

கண்ணமங்கலம் : கண்ணமங்கலம் அடுத்த ரெட்டிப்பாளையம் செல்லியம்மன் கோயில் பின்புறம் உள்ள மலையில் நேற்று போலீசார தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை எஸ்பி கார்த்திகேயன், ஏடிஎஸ்பி பழனி உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் போலீசார் கள்ளச்சாராய தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன், கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக், சுந்தரேசன் மற்றும் 18 போலீசார் அடங்கிய தனிச்சிறப்பு படையினர் ரெட்டிப்பாளையம் அருகே கோயில் பின்புறம் உள்ள மலைப்பகுதிகள் முழுவதும் சாராய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது டிரோன் கேமரா மூலம் எங்கேனும் சாராயம் காய்ச்சப்படுகிறதா? சாராய அடுப்புகள் இருக்கிறதா? என 3 மணி நேரம் தீவிரமாக சோதனை செய்தனர். தேடுதலின்
போது ஒரிடத்தில் லாரி டியூப்பில் 15 லிட்டர் சாராயமும், 25 சாராய பாக்கெட்டுகளும் இருப்பதை கண்டறிந்து, கீழே கொட்டி அழித்தனர். மேலும் போலீசார் வருவதையறிந்து தலைமறைவான சாராய வியாபாரியை தேடி வருகின்றனர். போலீசாரின் மேற்கொண்ட சாராய தடுப்பு பணிக்கு பொதுமக்கள் பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்.

The post கண்ணமங்கலம் அருகே டிரோன் கேமரா மூலம் சாராய வேட்டை appeared first on Dinakaran.

Tags : Selliamman Temple ,Dinakaraan ,
× RELATED கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில்...