×

கண்டமனூர் அருகே பரபரப்பு; தந்தையிடம் சொத்து கேட்டு குழியில் இறங்கி போராட்டம்: மயங்கி விழுந்த மகன் மீட்பு

வருசநாடு: தேனி மாவட்டம், கண்டமனூர் அருகே அடைக்கம்பட்டியைச் சேர்ந்தவர் காஜாமைதீன். விவசாயி. இவரது மூத்த மகன் முகமது சுல்தான், இளைய மகன் முகமது சுனில். காஜா மைதீன் தனது 40 சென்ட் நிலத்தை முகமது சுனிலுக்கு மட்டும் தர விரும்புவதாக முகமது சுல்தான் கூறி வந்துள்ளார். ேநற்று நிலத்தில் தனக்குரிய பங்கை அளிக்க வேண்டும் எனக்கூறி முகமது சுல்தான் நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

மாநில நெடுஞ்சாலையில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள அவரது தந்தையின் நிலத்தில் மூன்றடி குழியை தோண்டி, அதில் இறங்கி மண்ைண மூடிக் கொண்டார். அதன்பின், ‘எனக்குரிய சொத்தை தர வேண்டும்’ என கத்திக்கொண்டே போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்து வந்த கண்டமனூர் போலீசார், குழிக்குள் இருந்த அவரை மீட்க முயற்சித்தனர்.

அப்போது, முகமது சுல்தான் குழியில் இருந்து மேலே வர மறுப்பு தெரிவித்து, திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து போலீசார், அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தந்தையிடம் சொத்து கேட்டு, குழிக்குள் இறக்கி மகன் நடத்திய நூதன போராட்டத்தால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post கண்டமனூர் அருகே பரபரப்பு; தந்தையிடம் சொத்து கேட்டு குழியில் இறங்கி போராட்டம்: மயங்கி விழுந்த மகன் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Kandamanur ,Varusanadu ,Kazamaideen ,Adhikambatti ,Kandamanur, Theni district ,Mohammad Sultan ,Dinakaran ,
× RELATED மூலவைகை கரையோரங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்