×

காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் செயல்படும் முதன்மை உணவு பதப்படுத்தும் நிலையத்தில் வேளாண் வணிகத்துறை ஆணையர் ஆய்வு

காஞ்சிபுரம்: சுங்குவார்சத்திரத்தில் செயல்படும் முதன்மை உணவு பதப்படுத்தும் நிலையத்தினை வேளாண் வணிகத்துறை ஆணையர் பிரகாஷ் நேரில் ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பாக முதன்மை உணவு பதப்படுத்தும் நிலையம் 2022-2023ம் நிதியாண்டில் ரூ.5.74 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.இந்த, முதன்மை உணவு பதப்படுத்தும் நிலையத்தில், சுங்குவார்சத்திரம் சுற்றியுள்ள பகுதிகளில் விளையும் மாம்பழங்கள், காய்கறிகளை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யவும், மதிப்புக்கூட்டி நல்ல விலைக்கு விற்கவும், இதனால் இப்பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டது.

மேலும், முதன்மை உணவு பதப்படுத்தும் மையத்தில் உள்ள 10 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன அறை, விவசாயிகள் சேவை மையம் மற்றும் ரூ.3.2 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 2000 மெட்ரிக் டன் கொள்ளளவுள்ள சேமிப்பு கிடங்கினையும், மாம்பழத்திலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களையும் வேளாண் வணிகத்துறை ஆணையர் ஜி.பிரகாஷ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, இந்த முதன்மை உணவு பதப்படுத்தும் நிலையத்தினை, விவசாயிகளுக்கு இன்னும் பயன்படும் வகையில் பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுரைகளை வழங்கினார். ஆய்வின்போது காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் நா,ஜீவராணி, பொறியாளர் துரைராஜ், ஒழுங்கு முறை விற்பனை கூட மேற்பார்வையாளர் பழனி, உதவி வேளாண்மை அலுவலர் லோகு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் செயல்படும் முதன்மை உணவு பதப்படுத்தும் நிலையத்தில் வேளாண் வணிகத்துறை ஆணையர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Agribusiness Department ,Kancheepuram Chungwarchatra ,Kancheepuram ,Commissioner ,Prakash ,Chungwarchatra ,Kanchipuram district ,Sunkuvarchatra ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி...