×
Saravana Stores

விவசாயத்தை பாதிக்கும் கல்குவாரிக்கு அனுமதி கூடாது!: தென்காசியில் கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் போராட்டம்.. ஆட்சியரிடம் கோரிக்கை மனு..!!

தென்காசி: தென்காசி அருகே விவசாயத்தை பாதிக்கும் வகையில் அமைந்துள்ள கல்குவாரியின் உரிமத்தை ரத்து செய்யவேண்டும் என கிராமமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். சிவகிரி தாலுகாவிற்கு உட்பட்ட அரியூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான எம் சாண்ட் ஆலை மற்றும் கல்குவாரி செயல்பட்டு வருகிறது.

இந்த குவாரிகள் விவசாயத்தை பாதிக்கும் வகையில் பாசன கால்வாய்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்தும் குவாரிக்கு அளித்த உரிமத்தை ரத்து செய்ய கோரியும் அரியூர் கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்தினர். சட்ட விரோதமான இந்த கல்குவாரியால் சுமார் 1500 ஏக்கர் பரப்பளவிலான விவசாயம் கேள்விக்குறியுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

இது தொடர்பான புகார் மனுவை பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் கனிம வளத்துறை அதிகாரிகளிடம் உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார். கடந்த சில நாட்களாக தென்காசி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு கனிமங்கள் கடத்தப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் கல்குவாரிக்கு எதிரான கிராமமக்களின் இந்த போராட்டம் கவனத்தை பெற்றுள்ளது.

The post விவசாயத்தை பாதிக்கும் கல்குவாரிக்கு அனுமதி கூடாது!: தென்காசியில் கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் போராட்டம்.. ஆட்சியரிடம் கோரிக்கை மனு..!! appeared first on Dinakaran.

Tags : Kalkuwari ,South Kashi ,Tengkasi ,Tenkasi ,Kalaguari ,Dinakaran ,
× RELATED மே 25-ல் 3-வது முறையாக நடக்கும் குற்றாலம் பேரூராட்சி தலைவர் தேர்தல்