×

கும்பமேளா சென்ற ஜார்க்கண்ட் பெண் எம்பி விபத்தில் காயம்

ராஞ்சி: ஜார்க்கண்டில் நேற்று நடந்த சாலை விபத்தில் ஜேஎம்எம் கட்சி எம்பி காயமடைந்தார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) கட்சியை சேர்ந்த பெண் எம்பி மகுவா மஜ்ஜி.மாநிலங்களவை உறுப்பினரா மகுவா கும்பமேளாவுக்கு சென்று விட்டு நேற்று தனது குடும்பத்தினருடன் ராஞ்சிக்கு காரில் வந்தார். லட்டிஹார் மாவட்டம், ஹோட்வாக் என்ற இடத்தில் வரும் போது, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியது. இதி்ல், மகுவாவுக்கு இடது கையில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து மகுவாவை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் ராஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகுவாவை முதல்வர் ஹேமந்த் சோரன், அவரது மனைவி கல்பனா சோரன், ஒன்றிய பாதுகாப்பு இணை அமைச்சர் சஞ்சய் சேத் ஆகியோர் நேற்று மருத்துவமனைக்கு போய் மகுவாவை பார்த்து நலம் விசாரித்தனர்.

The post கும்பமேளா சென்ற ஜார்க்கண்ட் பெண் எம்பி விபத்தில் காயம் appeared first on Dinakaran.

Tags : Jharkhand ,Kumbh Mela ,Ranchi ,JMM ,Mukti Morcha ,Magua Majhi. ,Magua ,
× RELATED சபரிமலை தங்கம் திருட்டு...