×

ஜம்மு காஷ்மீரை சூழ்ந்த கடும் பனிப்பொழிவு: சாலைகள்,மரங்கள் என ஒன்றுவிடாமல் படர்ந்த பனி!!

ஜம்மு-காஷ்மீர்: வாடா மாநிலங்களில் குளிர் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பரவலாக பனி கொட்டி வருகிறது. தலைநகர் டெல்லியில் கடந்த சில வாரங்களாக கடும் குளிருடன் அடர்ந்த பனிமூட்டம் நிலவிய நிலையில், நேற்று இரவு பலத்த மழை பெய்தது. நரேலா, உஜ்வா, கவுதமபுத்தரர் நகர், பிரகதி மைதானம், ஜபான்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் மழை கொட்டியது. பஞ்சாப் மாநிலம் மோஹா பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது.

ஜம்மு-காஷ்மீரில் வெப்பநிலை மைனஸ் டிகிரிக்கு சென்று விட்டதால் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. வைஷ்ணவ் தேவி கோயில், ஸ்ரீநகர், குல்மார்க், உத்தம்பூர், ரியாசி ஆகிய பகுதிகளில் சாலைகளில் பனி படர்ந்துள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக பூஞ், ரஜோரி மாவட்டங்களை ஸ்ரீநகருடன் இணைக்கும் முகசாலை மூடப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்திலும் இரவு முதல் பனி கொட்டி வருகிறது. அங்குள்ள கேதார்நாத் கோயில் பனிப்போர்வை போத்தியது போல காட்சியளிக்கிறது.

The post ஜம்மு காஷ்மீரை சூழ்ந்த கடும் பனிப்பொழிவு: சாலைகள்,மரங்கள் என ஒன்றுவிடாமல் படர்ந்த பனி!! appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir ,Himachal Pradesh ,Wada ,Delhi ,
× RELATED குத்துச்சண்டை போட்டி: மாணவருக்கு தங்கப்பதக்கம்