இத்தாலி பிரதமருடன் எலான் மஸ்க் டேட்டிங்? வைரலாகும் புகைப்படங்கள்

நியூயார்க்: உலக பணக்காரரும் தொழிலதிபருமான 53 வயதாகும் எலான் மஸ்க்கும், 47 வயதாகும் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியோ மெலோனியும் டேட்டிங் செய்வதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் பரவி வருகிறது. நியூயார்க்கில் சம்பீத்தில் அட்லாண்டிக் கவுன்சில் குளோபல் சிட்டிசன் விருது வழங்கும் விழா நடந்தது. இதில் பிரதமர் மெலோனிக்கு எலான் மஸ்க் விருது வழங்கி பேசுகையில், ‘ நான் பார்த்து வியக்கும் மெலோனிக்கு இந்த விருதை வழங்குவதில் மகிழ்ச்சி ’ என்றார்.

அவருக்கு மெலோனியும், தனது எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். பல்வேறு காதல் உறவுகள் கொண்டவராக அறியப்படும் எலான் மஸ்க், மெலோனியுடன் டேட்டிங் செய்கிறாரா என்று அவர் மெலோனியை புகழும் வீடியோவையும், இருவரும் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்து பலர் கேள்வி எழுப்பி வந்தனர். அதை எலான் மஸ்க், முற்றிலுமாக மறுத்துள்ளார். மெலோனியுடன் எந்த காதல் உறவும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

The post இத்தாலி பிரதமருடன் எலான் மஸ்க் டேட்டிங்? வைரலாகும் புகைப்படங்கள் appeared first on Dinakaran.

Related Stories: