×

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய ஏவுகணை தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் பலி; இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

இஸ்ரேல்: இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய ஏவுகணை தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் பலியாகிய நிலையில் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஆயுதக் குழுக்கள் தாக்குதல்

இஸ்ரேலின் மிகப்பெரிய நகரமான டெல் அவிவ் மீது பாலஸ்தீன ஆயுதக்குழுக்கள் திடீரென ஏவுகணைகனை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலின் முக்கிய நகரான ஜெருசலேம் மீதும் ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணைகளை வீசித் தாக்குதல். ஹமாஸ் அமைப்பினரின் திடீர் தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் 3க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இஸ்ரேல் மீது அடுத்தடுத்து 5,000 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்தது. ஹமாஸ் அமைப்பினரின் திடீர் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்த நிலையில்பலர் காயம். ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதியை மீண்டும் கைப்பற்றவே தாக்குதல் என ஹமாஸ் அறிவிப்பு.

ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி

ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் படையினரும் பதில் தாக்குதல் நடத்துவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குள் புகுந்தும் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் நிலவி வருகிறது. இஸ்ரேல் மீது 12க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். டெல் அவிவ், ஜெருசலேம் நகரங்களில் அபாய எச்சரிக்கை ஒலிக்கப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்கு பதிலடி தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் போர் பிரகடனம் செய்தது.

வீடுகளை விட்டு வெளியேறும் பாலஸ்தீனியர்கள்

இஸ்ரேலின் பதில் தாக்குதலால் காசா முனையில் வசிக்கும் பாலஸ்தீனியர்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறினர்.

ஹமாஸ் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்

பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியது. ஹமாஸ் அமைப்பினரின் இருப்பிடங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆபரேஷன் எஃகு வாள் என்ற பெயரில் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்துகிறது.

இஸ்ரேலின் அதிரடி தாக்குதலில் பற்றி எரியும் காசா

காசாவில் இஸ்ரேல் விமானப்படை வான்வழி தாக்குதல் நடத்தி வருவதால் நகரம் முழுவதும் பற்றி எரிகிறது. ஹமாஸ் நிலைகள் மீது இஸ்ரேல் விமானப்படை குண்டு மழை பொழிந்து வருவதால் காசா முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. இஸ்ரேல் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் பலரை ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம்

பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்துவதால் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம்

இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்

இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. உதவி தேவைப்படுவோர் இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகலாம் எனவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹமாஸுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை

இதுவரை இல்லாத வகையில் பின்விளைவுகளை ஹமாஸ் இயக்கம் சந்திக்க வேண்டிவரும் இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் மீது போர் தொடுத்து மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டது ஹமாஸ் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல்: 20 பேர் பலி

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய ஏவுகணை தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் பலி; 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேல் பிரதமர் அவசர ஆலோசனை

ஹமாஸ் இயக்கத்தினர் நடத்தி வரும் தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவசர ஆலோசனை நடத்தி வருகிறது. ராணுவ தளபதி மற்றும் அமைச்சர்களுடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆலோசனை.

பாராசூட் மூலம் ஹமாஸ் இயக்கத்தினர் தாக்குதல்

இஸ்ரேல் பகுதிக்குள் பாராசூட் மூலம் குதித்து ஹமாஸ் இயக்கத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

 

The post இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய ஏவுகணை தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் பலி; இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க ஒன்றிய அரசு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Hamas ,Israel ,Union government ,Indians ,Dinakaraan ,
× RELATED ஹிஸ்புல்லா மீதான 21 நாட்கள்...