×

ஐபிஎல் கோப்பை வெல்லும் அணி: யுவராஜ் சிங் கணிப்பு

மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் எந்த அணி கோப்பை வெல்லப்போகிறது என்பது பற்றி முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தனது கருத்தை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், இந்த ஆண்டு தனக்குப் பிடித்தமான அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் என்றும் ஆனால் இந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆண்டாக இருக்கும் என்றும் பஞ்சாப் அணி கோப்பை வெல்லும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணி ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையில் சிறப்பாக விளையாடி வருகிறது. அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. அந்த வகையில் யுவராஜ் சிங், அந்த அணி இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பை வெல்லும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

The post ஐபிஎல் கோப்பை வெல்லும் அணி: யுவராஜ் சிங் கணிப்பு appeared first on Dinakaran.

Tags : IPL ,Yuvraj Singh ,Mumbai ,2025 IPL ,Sunrisers Hyderabad ,Dinakaran ,
× RELATED ஜூனியர் மகளிர் உலக ஹாக்கி; ஸ்பெயின்...