×

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 60% இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 60 சதவீதம் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் எதிரொலியால், சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி முனைப்பு காட்டி வருகிறது. இருப்பினும் பல்வேறு இடங்களில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நடமாடும் மழைக்கால மருத்துவ சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

300 நடமாடும் மருத்துவ முகாம் வாகனங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். மழை காலங்களில் மக்களுக்கு ஏற்படும் நோய்கள் தீர்க்கும் வகையில் மருத்துவ முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; 4 மாவட்டங்களில் 300 வாகனங்களின் மூலம் நடமாடும் மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் மருத்துவ உதவிகள் வழங்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏரிகளில் திறந்துவிடப்படும் உபரி நீரால் கூவம், அடையாறு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏரிகளுக்கு தொடர்ந்து நீர் வருவதால் உபரி நீரும் தொடர்ந்து திறக்கப்படுகிறது. சென்னையில் 50 செ.மீ மழை பதிவாகியுள்ளது; கடந்த காலத்தில் பெய்த மழை இந்த வருடத்தில் பெய்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 60 சதவீதம் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது எனவும் கூறினார்.

The post வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 60% இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Ma ,Chennai ,MLA ,Subramanian ,Mikjam ,Ma. ,Dinakaran ,
× RELATED குரங்கம்மை சிகிச்சை.. 200...