×

அடுத்தடுத்து கார்கள் விபத்து 5 பேர் காயம்

பூந்தமல்லி: சென்னை பூந்தமல்லி – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், செம்பரம்பாக்கம் அருகே நேற்று மாலை வாகனங்கள் அணிவகுத்து சென்றன. அப்போது கார் ஒன்று சென்றபோது திடீரென மாடு குறுக்கே வந்தது. இதனால் காரை ஓட்டி வந்தவர் பிரேக் பிடித்தார். கட்டுப்பாட்டை இழந்த கார் மீது பின்னால் வந்த 3 கார்கள், ஒரு தனியார் பேருந்து அடுத்தடுத்து மோதியது. இதில் ஒரு கார் சேதம் அடைந்தது. ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கி சாலையில் நின்ற வாகனங்களை அப்புறப்படுத்தினார்கள். இந்த விபத்தில் 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

The post அடுத்தடுத்து கார்கள் விபத்து 5 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Poontamalli ,Bengaluru National Highway ,Chembarambakkam ,Dinakaran ,
× RELATED பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில்...