×

இந்திய ஒற்றுமை மற்றும் நீதிக்கான யாத்திரையை மணிப்பூரில் தொடங்கினார் ராகுல் காந்தி

மணிப்பூர்: இந்திய ஒற்றுமை மற்றும் நீதிக்கான யாத்திரையை மணிப்பூரில் ராகுல் காந்தி தொடங்கினார். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை மற்றும் நீதிக்கான யாத்திரை தவுபல் மாவட்டத்தில் இருந்து தொடங்கியது. ராகுலின் 2-ம் கட்ட ஒற்றுமை யாத்திரை 15 மாநிலங்களில் 67 நாட்கள் 6,712 கி.மீ. தூரம் நடைபெற உள்ளது. ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.

டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவிய நிலையில் ராகுலின் மணிப்பூர் பயணம் தாமதமானது. அதனால் தலைவர்கள் விமான நிலையத்தில் காத்திருந்தனர்.  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மணிப்பூரில் இன்று முதல் பேருந்து பயணம் மற்றும் நடைப்பயணமாக 66 நாள்கள் 6,713 கி.மீ. தொலைவைக் கடந்து மார்ச் 20ம் தேதி மும்பை வரை செல்கிறார்.

முன்னதாக ராகுல் காந்தியின் நடைப்பயணம் மணிப்பூரில் தொடங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பல்வேறு நிபந்தனைகளுடன், அம்மாநில அரசு அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது. அதையடுத்து ராகுல் காந்தி இன்று ‘இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை’ மணிப்பூரில் தொடங்குவதற்காக இன்று காலை டெல்லியில் இருந்து இம்பாலுக்கு செல்வதற்காக டெல்லி விமான நிலையம் வந்தார்.

அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் விமான நிலையம் வந்தனர். இண்டியோ சிறப்பு விமானத்தில் அவர்கள் புறப்பட இருந்த நிலையில், டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் குறிப்பிட்ட நேரத்தில் விமானம் புறப்பட்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது. அதனால் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி விமான நிலையத்தின் ஓய்வறையில் பல மணி நேரம் காத்திருந்தனர். பின்னர் அவர்கள் இம்பால் புறப்பட்டு சென்றனர். விமானம் தாமதமாக புறப்பட்டதால் மணிப்பூரில் இன்றைய யாத்திரையை தொடங்கினார். இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

The post இந்திய ஒற்றுமை மற்றும் நீதிக்கான யாத்திரையை மணிப்பூரில் தொடங்கினார் ராகுல் காந்தி appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Manipur ,Daubal district ,Rahul ,for unity and justice ,
× RELATED பிரதமர் மோடியின் முதலாளித்துவ...