×

2 லட்சம் இந்தியர்கள் பாஸ்போர்ட் ஒப்படைப்பு

புதுடெல்லி: கடந்த 8 ஆண்டுகளில் 2.4 லட்சம் இந்தியர்கள் தங்கள் பாஸ்போர்ட்டுகளை ஒப்படைத்துள்ளனர் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய வெளியுறவு துறை இணை அமைச்சர் முரளீதரன்,‘‘கடந்த 2014ம் ஆண்டு முதல் 2022 ம் ஆண்டு வரை மொத்தம் 2,46,580 இந்தியர்கள் தங்கள் பாஸ்போர்ட்டுகளை ஒப்படைத்துள்ளனர். அதில், அதிகபட்சமாக டெல்லியில் 60,414 பேர் பாஸ்போர்ட்களை ஒப்படைத்துள்ளனர். மேலும், பஞ்சாப்பில் 28, 117, குஜராத்தில் 22,300,கோவாவில் 18,610, கேரளாவில் 16,247 பேரும் ஒப்படைத்துள்ளனர் ’’ என்றார்.

The post 2 லட்சம் இந்தியர்கள் பாஸ்போர்ட் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Indians ,New Delhi ,Union government ,Dinakaran ,
× RELATED பக்ரீத் பண்டிகை ஜனாதிபதி வாழ்த்து