கொழும்பு: இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தனாவை இந்திய தூதர் சந்தோஷ் ஜா நேற்று சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேசினார். இலங்கைக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ள சந்தோஷ் ஜா கடந்த வாரம் பதவியேற்றார். இவர் நேற்று பிரதமர் தினேஷ் குணவர்த்தனாவை சந்தித்தார். அப்போது, இந்தியா- இலங்கை இடையேயான பல பரிமாணங்களை கொண்ட இரு தரப்பு உறவுகள் குறித்து பேசினார்.
இது தொடர்பாக இலங்கை அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் எரிசக்தி துறை, திரிகோணமலை எண்ணெய் கிட்டங்கி திட்டம், துறைமுகங்கள், ரயில்வே ஆகிய துறைகளில் இந்தியா முதலீடு செய்வது குறித்து சந்தோஷ் ஜாவுடன் குணவர்த்தனா பேசினார். பொருளாதார நெருக்கடி காலத்தில் கடனுதவி, நிவாரண பொருட்கள், மருந்து மற்றும் உணவு ஆகியவற்றை வழங்கி உதவி செய்ததற்காக இந்தியாவிற்கு நன்றி தெரிவிப்பதாக குணவர்த்தனே கூறினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post இலங்கை பிரதமருடன் இந்திய தூதர் சந்திப்பு appeared first on Dinakaran.