×

இந்தியா கூட்டணியை பார்த்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நடுக்கம் வந்துவிட்டது: சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சாடல்

மும்பை: இந்தியா கூட்டணியை பார்த்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நடுக்கம் வந்துவிட்டதாக உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். பாட்னா, பெங்களூருவை தொடர்ந்து இந்தியா கூட்டணியின் 3-வது கட்ட ஆலோசனை கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்றனர். நாடாளுமன்ற தேர்தலை ஒன்றாக இணைந்து சந்திக்க இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரபட்டது. ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் இந்தியா கூட்டணி தலைவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது பேசிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மும்பையில் நடந்த இந்தியா கூட்டணியின் கூட்டம் ஆக்கப்பூர்வமானதாக இருந்தது. இந்தியா கூட்டணியின் கூட்டணியை பார்த்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நடுக்கம் வந்துவிட்டது. சர்வாதிகாரத்தையும் முதலாளித்துவத்தையும் இந்தியா கூட்டணி எதிர்க்கும். இந்தியா கூட்டணி வெற்றிக் கூட்டணி. நாங்கள் தனிப்பட்ட கூட்டணி அல்ல, நாங்கள் இந்திய குடும்பம்.

நாளுக்கு நாள் இந்தியா கூட்டணி வலுப்பெற்று வருகிறது. அச்சத்தில் இருந்து நாட்டை விடுவிக்க இந்தியா கூட்டணி உறுதி பூண்டுள்ளது என்றார். தொடர்ந்து, விலைவாசி உயர்வை, வேலையில்லா திண்டாட்டத்துக்கு தீர்வு காண இந்தியா கூட்டணி உறுதி பூண்டுள்ளது என்று கூறிய தாக்கரே, தேர்தலை மனதில் வைத்தே கேஸ் சிலிண்டர் விலையை பாஜக அரசு குறைத்துள்ளதாக விமர்சனம் செய்தார்.

The post இந்தியா கூட்டணியை பார்த்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நடுக்கம் வந்துவிட்டது: சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சாடல் appeared first on Dinakaran.

Tags : BJP ,National Democratic Alliance ,India ,Shiv Sena ,Uddhav Thackeray Chatal ,Mumbai ,Uddhav Thackeray ,India alliance ,Patna ,Shiv ,Sena ,
× RELATED இன்று என்டிஏ நாடாளுமன்ற கட்சி கூட்டம்