×

இந்தியா சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தும் என பாகிஸ்தான் மக்கள் அச்சம்: பாகிஸ்தான் முன்னாள் தூதர் அப்துல் பாசித் தகவல்

பாகிஸ்தான்: தங்கள் மீது இந்தியா மீண்டும் ஒரு சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தும் என பாகிஸ்தான் மக்கள் மத்தியில் அச்சம் உள்ளதாக அந்நாட்டு முன்னாள் தூதர் அப்துல் பாசித் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் பூஜ் பகுதியில் கடந்த வாரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 இந்திய ராணுவவீரர்கள் வீரமரணமடைந்தனர். இது தொடர்பாக வீடியோ ஒன்றில் பேசிய அப்துல் பாசித் பூஜ் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மீண்டும் ஒரு சர்ஜிகல் ஸ்ட்ரைக் அல்லது விமானப் படை தாக்குதல் நடத்தும் என பாகிஸ்தான் மக்கள் பேசிவருவதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் அப்படி ஒரு முடிவை இந்தியா எடுக்காது என தான் உறுதிபட நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு தங்கள் நாட்டிலும் நடைபெற இருக்கும் நிலையிலும் ஜி20 அமைப்பின் தலைமை பதவியை வகிக்கும் நிலையிலும் சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தும் முடிவை இந்தியா எடுக்காது என்று நம்புவதாக அப்துல் பாசித் விளக்கமளித்தார். ஆனால் அடுத்த ஆண்டு இந்தியாவில் தேர்தல் நடப்பதற்கு முன்னதாக தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 2019ல் புல்வாமாவில் துணை ராணுவப்படையினரை பயங்கரவாதிகள் தாக்கியதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

The post இந்தியா சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தும் என பாகிஸ்தான் மக்கள் அச்சம்: பாகிஸ்தான் முன்னாள் தூதர் அப்துல் பாசித் தகவல் appeared first on Dinakaran.

Tags : Pakistan ,India ,Abdul Basit ,
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில்...