இந்தியா 2047ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாகும் அளவுக்கு வேகமாக வளர்ந்து வருகிறதா? ரகுராம் ராஜன் பதில்

புதுடெல்லி: ‘மேக் இன் இந்தியா’ திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதைத் தொடர்ந்து, பிரபல பொருளாதார நிபுணர் ரகுராம் ராஜன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மேக் இன் இந்தியா திட்டத்தின் நோக்கம் சிறந்தது. இதில் சில துறைகளில் நாம் நிறைய செய்துள்ளோம். குறிப்பாக உள்கட்டமைப்பு துறையில் கடந்த 10 ஆண்டில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஆனாலும், உள்நாட்டு உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரித்தல் போன்ற துறைகளில் இன்னும் அதிகம் செய்ய வேண்டி இருக்கிறது.

வணிகம் செய்வதை எளிதாக்க வேண்டும், அரசு கொள்கைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும், வரித்துறையால் மேற்கொள்ளப்படும் ரெய்டுகள் பயம் குறைக்கப்பட வேண்டும். உலக வங்கி கூறியிருக்கும் பட்டியலை பின்பற்றாமல், தொழிலதிபர்களின் குறைகளை அரசு நேரடியாக கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டும். இவற்றில் கவனம் செலுத்தினால், மேக் இன் இந்தியா திட்டம் கருத்தை இன்னும் வலுப்படுத்த முடியும்.

2047ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாற 7 சதவீத வளர்ச்சி போதுமா என்று கேட்டால் அது போதாது என்றே கூற முடியும். இதே வேகத்தில் நமது வளர்ச்சி இருந்தால் ஜெர்மனி, ஜப்பானை அடுத்த 2 அல்லது 3 ஆண்டில் முந்திவிடலாம். அது சாத்தியம். ஆனால் வளர்ச்சி அடைந்த நாடு என்பதற்கு சில மாறக்கூடிய அளவீடுகள் உள்ளன என்றார்.

The post இந்தியா 2047ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாகும் அளவுக்கு வேகமாக வளர்ந்து வருகிறதா? ரகுராம் ராஜன் பதில் appeared first on Dinakaran.

Related Stories: