×

இந்தியாவில் நேற்று இயல்பை விட 81% அதிகம் மழை; டெல்லி , பஞ்சாப்பில் அடுத்த 2 தினங்களுக்கு மழை எச்சரிக்கை

டெல்லி: இந்தியாவில் நேற்று இயல்பை விட 81% அதிகம் மழை பதிவாகியுள்ளது. டெல்லியில் 41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 153 மி.மீ. மழை கொட்டித் தீர்த்தது. மேல்திசை காற்றில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக டெல்லி, ஹரியானா, ஜம்மு- காஷ்மீர் ஆகிய வடமேற்கு இந்திய மாநிலங்களில் நேற்று முன்தினம் மிக பலத்த மழை பெய்தது. ஹிமாச்சலில் ஒரே நாளில் 104 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

பலத்த மழையின் காரணமாக பல இடங்களில் வீடு இடிந்து விழுந்தது. பல இடங்களில், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இணையதள சேவை முடங்கியது. நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 153 மி.மீ. மழை பெய்ததாக டெல்லி வானிலை மையம் தெரிவித்துள்ளது. 1958-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி பெய்த கனமழை 266 மி.மீ. என பதிவாகியிருந்தது. அதனை அடுத்து 1982-ம் ஆண்டு ஜூலை மாதம் ஒரே நாளில் 169 மி.மீ. மழை பெய்தது. அதன்பிறகு கடந்த 41 ஆண்டுகளில் இதுதான் ஜூலை மாதங்களில் அதிகபட்ச மழை ஆகும். ஜூலை மாதங்களில் 3-வது அதிகபட்ச மழை அளவாக நேற்று பெய்த மழை பதிவாகியுள்ளது.

டெல்லி மட்டுமின்றி, காஷ்மீர், இமாசலபிரதேசம், அரியானா, ராஜஸ்தான் ஆகிய அண்டை மாநிலங்களுக்கும் மழை நீடிக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. கடந்த 36 மணி நேரத்தில், 13 நிலச்சரிவு சம்பவங்களும், 9 திடீர் வெள்ளப்பெருக்கு சம்பவங்களும் ஏற்பட்டன.

The post இந்தியாவில் நேற்று இயல்பை விட 81% அதிகம் மழை; டெல்லி , பஞ்சாப்பில் அடுத்த 2 தினங்களுக்கு மழை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : India ,Delhi, Punjab ,Delhi ,Punjab ,
× RELATED இந்தியா கூட்டணிக் கூட்டம்: முதல்வரின் டெல்லி பயணம் ரத்து