×

இந்தியாவில் 3 மாதங்களில் 19 லட்சம் வீடியோக்கள் நீக்கம்… யூடியூப் நிறுவனம் அதிரடி..!!

டெல்லி: நடப்பாண்டில் முதல் மூன்று மாதங்களில் இந்தியாவில் தான் அதிகளவில் வீடியோக்களை நீக்கியுள்ளதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் யூடியூப் சமூக ஊடகத்தில், தினசரி செய்திகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட வீடியோக்கள் கிடைக்கின்றன. இதில் பார்வையாளர்களை அதிகம் பெற வேண்டும் என்பதற்காக, ஒருசில யூடியூபர்கள் தவறான தகவல்களை பதிவேற்றம் செய்கின்றனர். இது போன்ற வீடியோக்களை கண்டறிந்து, யூடியூப் சமூக ஊடகம் நீக்கி வருகிறது.

இது தொடர்பாக யூடியூப் சமூக வலைதள நிறுவனம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் சமூக விதிமுறைகளை மீறியதற்காக இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை உலகம் முழுவதிலும் 64.8 கோடி வீடியோக்களை யூடியூப் நீக்கியுள்ளது. இந்தியாவில் இதே காலகட்டத்தில் 19 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன. உலக நாடுகள் இடையே நீக்கப்பட்ட வீடியோக்கள் எண்ணிக்கையில் இதுவே மிக அதிகம் ஆகும்.

அதேபோல, அமெரிக்காவில் 6.55 லட்சம் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன. இதையடுத்து ரஷ்யாவில் இருந்து 4,91,933 வீடியோக்களும், பிரேசில் நாட்டிலிருந்து 4,49,759 வீடியோக்களும் நீக்கப்பட்டுள்ளன. யூடியூப் நிறுவனம் ஆரம்ப நாட்களில் இருந்து, எங்களின் சமூக வழிகாட்டுதல்கள் யூடியூப் சமூகத்தை தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்திலிருந்து பாதுகாத்து வருகின்றன. துவக்கத்தில் இருந்தே சமூகத்திற்கு தீங்கான வீடியோக்களை புறக்கணித்து வருகிறோம். இதில் எந்த சமரசமும் செய்ய மாட்டோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post இந்தியாவில் 3 மாதங்களில் 19 லட்சம் வீடியோக்கள் நீக்கம்… யூடியூப் நிறுவனம் அதிரடி..!! appeared first on Dinakaran.

Tags : India ,Delhi ,YouTube ,Google Company ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...