×

பால்கொள்முதலை அதிகரிப்பது முக்கிய சவாலாக உள்ளது: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

நெல்லை: பால்கொள்முதலை அதிகரிப்பது முக்கிய சவாலாக உள்ளது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் நெல்லையில் பேட்டி அளித்துள்ளார். பால்கொள்முதல் அதிகரித்தும் ஆவின் உபபொருட்கள் தயாரிக்க புதிய இயந்திரங்கள் அமைக்க திட்டம் வகுத்துள்ளனர் என்று அமைச்சர் கூறியுள்ளார். தமிழகத்தில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் (ஆவின் நிர்வாகம்) ஈடுபட்டு வருகிறது.

ஆவின் பால் கொள்முதல் 37.38 லட்சமாக இருந்த நிலையில், தற்போது நாள்தோறும் 27 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது. மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம், ஆவினுக்கு அனுப்ப வேண்டிய பால் கொள்முதல் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் லிட்டர் என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 42 ஆயிரம் லிட்டர் கொள்முதல் செய்யப்படுகிறது. கூட்டுறவு சங்க செயலாளர்கள் கூடுதலாக உறுப்பினர்களை சேர்த்து, கொள்முதலை அதிகப்படுத்த வேண்டும். அடுத்த சில ஆண்டுகளில் ஆவின் பால் தினசரி கொள்முதல் அளவு 5 லட்சம் முதல் 8 லட்சம் லிட்டர் வரை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

The post பால்கொள்முதலை அதிகரிப்பது முக்கிய சவாலாக உள்ளது: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister Mano Thangaraj ,Nellai ,Minister ,Mano Thangaraj ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல் முடியும் வரை பிரதமர்...