×

மணல் குவாரி தொடர்பாக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் 5 மணி நேரத்துக்கு மேலாக அமலாக்கத்துறை சோதனை

சென்னை: மணல் குவாரி தொடர்பாக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் 5 மணி நேரத்துக்கு மேலாக அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளனர். இன்று காலை 8 மணியில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடியாக சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இவர்கள் சோதனைகளில் குறிவைப்பது மணல் குவாரி நடத்தும் தொழில் அதிபர்கள் மீது இந்த சோதனைகளை அவர்கள் அரமித்திருக்கிறார்கள்.

முக்கியமாக பார்க்கும்பொழுது திண்டுக்கல் பகுதியில் மிக பெரிய பிரபல தொழில் அதிபர் ரத்தினம் மற்றும் புதுக்கோட்டை சேர்ந்த ராமச்சந்திரன், உள்ளிட்ட தொழில் அதிபர் வீட்டில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவர்கள் அனைவரும் மணல் குவாரி தொடர்புடைய தொழில்களை மேற்கொண்டு வருகின்றார்கள். இவர்கள் பகுதியில் இவர்களுக்கு தொடர்பான வீடு மற்றும் அலுவலகங்களில் ஏற்கனவே வருமானவரி சோதனை என்பது நடத்தப்பட்டு பல்வேறு ஆவணங்கள் என்பது பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் வருமான வரித்துறை சோதனையின் போது கிடைக்கப்பெற்ற தகவல்களை அடிப்படையாக வைத்து தமிழகம் முழுவதும் அமலாக்கத் துறையினர் இந்த சோதனையை மேற்கொண்டு வருவதாக தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த சோதனை என்பது நடைபெற்று வருவதாகவும் இந்த மணல் குவாரி தொழில் அதிபர்களுக்கு தொடர்புடைய வீடு மற்றும் அலுவலகங்கள் மட்டுமல்லாது மணல் குவாரி சம்மந்தப்பட்ட அதிகாரிகள் யார்யார் என்று அவர்கள் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சென்னையை பொறுத்தவரை இன்று அண்ணா நகர் பகுதியில் ஆடிட்டர் ஒருவர் வீட்டிலும் இந்த நிறுவனங்களுக்கு எல்லாம் ஆடிட்டிங் பார்க்கும் சண்முகராஜ் அவருடைய வீட்டிலும் அதேநேரத்தில் முகப்பேறு பகுதியிலும் ஒரு பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தொடர்ந்து இங்கு பல்வேறு இடங்களில் இந்த மணல் குவாரி தொழில் அதிபர்கள் தொடர்பான முகவரி கிடைத்தாலும் அதுதொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒவ்வொரு வீடுகளாக சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மணல் குவாரி தொடர்பாக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் 5 மணி நேரத்துக்கு மேலாக அமலாக்கத்துறை சோதனை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Enforcement Department ,
× RELATED பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை...