×

நிலக்கரி வர்த்தகத்தில் அதானி நிறுவனம் ரூ.12,000 கோடி புது ஊழல்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில், ‘பாஜ தனது ஊழல் சகாவான அதானி நிறுவனத்தின் மூலம் தேர்தல் பாண்டுகள் மூலம் மாபெரும் நிதியுதவிகளை பெற்றுள்ளது. அந்த நிதியை வைத்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி, அக்கட்சிகளை உடைத்து வருகிறது. தற்போது பைனான்சியல் டைம்ஸ் நாளிதழ் தனது ஆய்வில் அதானி நிறுவனத்தின் புதிய ஊழலை வெளிப்படுத்தியுள்ளது. 2019 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் 30 முறை நடந்த, 3.1 மில்லியன் டன் நிலக்கரி இறக்குமதியில் அதன் விலையை உயர்த்தி போலிக்கணக்கு காட்டி 52 சதவீத லாபம் அதாவது ரூ. 12,000 கோடி மக்கள் பணத்தை அதானி நிறுவனம் சுருட்டியுள்ளது. இந்த மாபெரும் ஊழலுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்’ என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

The post நிலக்கரி வர்த்தகத்தில் அதானி நிறுவனம் ரூ.12,000 கோடி புது ஊழல்: காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Adani ,Congress ,New Delhi ,General Secretary ,Jairam Ramesh ,Baja ,
× RELATED புதுச்சேரி திமுக முன்னாள் முதல்வர்...