×

செல் போன் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி 10% ஆக குறைப்பு

புதுடெல்லி: செல்போன் உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரியை 15%ல் இருந்து 10% ஆக ஒன்றிய அரசு குறைத்துள்ளது. ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் செல் போன் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்களின் இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைத்து ஒன்றிய நிதியமைச்சகம் நேற்றுமுன்தினம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.செல்போன்களின் உதிரிபாகங்களான பின் கவர், பேட்டரி கவர்,ஜிஎஸ்எம் ஆன்டெனாா,கேமரா லென்ஸ்,ஸ்க்ரூ,சிம் சாக்கெட் மற்றும் இயந்திர பொருட்கள் போன்றவற்றின் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது.

உதிரிபாகங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உள்ளீடுகளின் மீதான இறக்குமதி வரி பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த இறக்குமதி வரி குறைப்பு உலகளாவிய உற்பத்தியாளர்களுக்கு இந்தியாவில் பெரிய அளவிலான செல்போன் அசெம்பிளி லைன்களை அமைக்க உதவும், செல்போன்கள் ஏற்றுமதியை கணிசமாக அதிகரிக்கும் என இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அசோசியேசன் தலைவர் பங்கஜ் மொகிந்த்ரு தெரிவித்தார்.

The post செல் போன் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி 10% ஆக குறைப்பு appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Union government ,Dinakaran ,
× RELATED குடியரசு தலைவர் வாசித்தது ஒன்றிய அரசு...