×

கர்நாடக அரசை கண்டித்து ஐஜேகே ஆர்ப்பாட்டம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றிய மற்றும் நகரம் இந்திய ஜனநாயக கட்சி சார்பில், காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து, உத்திரமேரூர் பஜார் வீதியில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தலைவர் அப்பு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதில், முதன்மை அமைப்பு செயலாளர் வெங்கடேசன், மாநில துணை பொதுச்செயலாளர் நெல்லை ஜீவா, மாநில மகளிர் அணி துணை செயலாளர் இளவரசி ஆகியோர் பங்கேற்றனர். இதில், கர்நாடகா அரசின் அராஜக போக்கை கண்டித்தும், அப்பாவி தமிழர்கள் பாதிக்கப்படுவதை கண்டித்தும், தேசிய நதிநீர் ஆணையத்தை கூட்டி தண்ணீர் திறக்க வலியுறுத்தும் வகையில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது. அப்போது, கர்நாடக அரசை கண்டித்தும், ஒன்றிய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கர்நாடக அரசை கண்டித்து ஐஜேகே ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : IJK ,Karnataka government ,Uttara Merur ,Indian Democratic Party ,Dinakaran ,
× RELATED நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை