×

IAS, IPS கனவை நினைவாக்கிய ‘நான் முதல்வன் திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: இன்று UPSC தேர்வு முடிவுகள் வெளியானது. UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய தரவரிசையில் 23ம் இடமும், தமிழ்நாட்டு தரவரிசையில் சிவச்சந்திரன் முதலிடம் பிடித்துள்ளார்.

நான் முதல்வன் மூலம் பயிற்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த சிவச்சந்திரன் UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய தரவரிசையில் 23ம் இடமும், தமிழ்நாட்டு தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். இதேபோல் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த மோனிகா அகில இந்திய அளவில் 39வது இடத்தை பெற்றுள்ளார்!

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 134 பேர் பயிற்சி பெற்ற நிலையில் 50 பேர் சிவில் சர்விஸ் தேர்வில் தேர்ச்சி. தமிழ் வழியில் தேர்வு எழுதிய காமராஜ், சங்கரபாண்டியன் ஆகிய இருவர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் “பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் நான் முதல்வன் திட்டம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார். எது மகிழ்ச்சி? நான் மட்டும் முதல்வன் அல்ல. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் முதல்வனாக, என் பிறந்தநாளில் தொடங்கி வைத்த ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் UPSC தேர்வில் தமிழ்நாட்டுத் தரவரிசையில் முதல்வன் ஆகியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது!

பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் இந்தத் திட்டம், வருங்காலங்களில் இலட்சக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றிடும் என்ற நம்பிக்கை என் மகிழ்ச்சியாகியுள்ளது

The post IAS, IPS கனவை நினைவாக்கிய ‘நான் முதல்வன் திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Chennai ,UPSC ,Sivaschandran ,India ,UPSC Civil Services ,Tamil Nadu ,Naan Multhavan ,UPSC Civil… ,Dinakaran ,
× RELATED அமித் ஷாவா, அவதூறு ஷாவா?. தமிழ்நாட்டில்...