×

இந்த நிதியாண்டுக்குள் ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டம்: ரயில்வே வாரிய தலைவர் நம்பிக்கை

இந்தூர்: இந்த நிதியாண்டுக்குள் ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என ரயில்வே வாரிய தலைவர் தெரிவித்தார்.உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஜெர்மனியில் கடந்த ஆண்டுஅறிமுகம் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு ரயில் இயக்கப்படும் என ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ரயில்வே வாரிய தலைவர் அனில் குமார் லகோட்டி நேற்று நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலை தயாரிப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்தியாவில் சிறந்த முறையிலும் குறித்த காலக்கெடுவுக்குள்ளும் ஹைட்ரஜன் ரயிலை தயாரிப்பதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த நிதியாண்டுக்குள்ளே ரயிலின் சோதனை ஓட்டத்தை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஹைட்ரஜன் ரயில் அறிமுகப்படுத்துவதன் மூலம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் இந்தியா முன்னணி நாடாக விளங்கும்’’ என்றார்.

The post இந்த நிதியாண்டுக்குள் ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டம்: ரயில்வே வாரிய தலைவர் நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Railway Board ,President ,Faith ,Dinakaran ,
× RELATED அப்பாவி உயிர்கள் போன பிறகு செயல்படும்...