×

‘நூறு நாள் வேலை திட்ட ஊதியம் விரைவில் ₹300 ஆக உயர்த்தப்படும்’

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் புதிய குடிநீர் திட்ட பணிகளை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், ‘‘தமிழ்நாடு முதல்வர் மக்களின் நலனுக்காக பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் 1.15 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ₹1,000 வழங்கப்பட்டு வருகிறது.

விடுபட்டவர்கள் குறித்து மூன்றாவது முறையாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஊரக வளர்ச்சித் துறையில் 100 நாள் வேலைத் திட்டத்தில் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ஊதியம் ₹210ல் இருந்து ₹294 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் ₹300 ஆக உயர்த்தி வழங்கப்படும். இந்தியாவில் சமத்துவம், சகோதரத்துவம், எல்லோரும் சமம், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற சோசலிச அரசை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்.’’ என்றார்.

The post ‘நூறு நாள் வேலை திட்ட ஊதியம் விரைவில் ₹300 ஆக உயர்த்தப்படும்’ appeared first on Dinakaran.

Tags : Nilakottai ,Rural Development Minister ,I. Periyasamy ,Nilakottai, Dindigul district.… ,Dinakaran ,
× RELATED ஊரக பகுதிகளில் 2,000 கி.மீ.க்கு சாலைகள்...