- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- எம்.கே. ஸ்டாலின்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மு.கே ஸ்டாலின்
- தின மலர்
சென்னை: மருத்துவமனையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். தனது கொளத்தூர் தொகுதியிலும் அவர் சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.இந்நிலையில் அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டது. மேலும், வழக்கமான மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டியது இருந்தது. எனவே அவர் நேற்று முன்தினம் மாலை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் இருந்து 4ம் தேதி அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் ” என்று அதில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் உடல் பரிசோதனை முடிந்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 9.50 மணி அளவில் வீடு திரும்பினார். அவர் ஓரிரு தினங்கள் வீட்டில் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
The post மருத்துவமனையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் டிஸ்சார்ஜ் appeared first on Dinakaran.