×

குதிரைவாலி சர்க்கரைப் பொங்கல்

தேவையானவை:

குதிரைவாலி அரிசி 1/2 கப்,
பாசிப்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்,
தூளாக்கிய வெல்லம் அரை கப் (தலை தட்டியது),
நெய் – தேவையான அளவு, ஏலக்காய் 1,
கிராம்பு 1,
முந்திரி 6.

செய்முறை:

பாசிப்பருப்பை வாசனை வரும்வரை வறுத்துக்கொள்ளவும். பிறகு, கழுவிய குதிரைவாலி அரிசியை, பருப்போடுச் சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி 3 அல்லது 4 விசில் வரை வேகவிடவும். அரிசி நன்கு வெந்ததும் வெல்லத்தைச் சேர்த்து கலக்கவும். சில வெல்லங்களில் கல் இருக்கும் என்பதால், அதனை தண்ணீரில் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்ததும், அதனை வடிகட்டி, வெந்த அரிசிபருப்பு கலவையில் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். நெய்யில் முந்திரி, ஏலக்காய், கிராம்பைச் சேர்த்து வறுத்துப் பொங்கலில் சேர்க்கவும். சிறிது நெய், ஏலக்காய்த்தூளை பொங்கலில் சேர்த்து 4 நிமிடங்கள் கிளறி இறக்கிப் பரிமாறவும்.

The post குதிரைவாலி சர்க்கரைப் பொங்கல் appeared first on Dinakaran.

Tags :
× RELATED நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்கள்