×

இந்தியைத் தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என சுருக்கி இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்த வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி

சென்னை: இந்தியைத் தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என சுருக்கி இழிவுபடுத்துவதை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

“இந்தி தான் நாட்டு மக்களை ஒன்றிணைக்கிறது – பிராந்திய மொழிகளுக்கு அதிகாரமளிக்கிறது” என்று வழக்கம் போல தனது இந்தி மொழிப் பாசத்தை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பொழிந்துள்ளார்.

இந்தி படித்தால் முன்னேறலாம் என்ற கூச்சலின் மாற்று வடிவம் தான் இந்தக் கருத்து. தமிழ்நாட்டில் தமிழ் – கேரளாவில் மலையாளம். இவ்விரு மாநிலங்களையும் இந்தி எங்கே ஒன்றிணைக்கிறது? எங்கே வந்து அதிகாரமளிக்கிறது?.

நான்கைந்து மாநிலங்களில் பேசப்படும் இந்தியை, ஒட்டு மொத்த இந்திய ஒன்றியத்தையும் ஒன்றிணைப்பதாக கூறுவது அபத்தமானது. இந்தியைத் தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என்று சுருக்கி இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post இந்தியைத் தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என சுருக்கி இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்த வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி appeared first on Dinakaran.

Tags : Amit Shah ,Minister ,Udhayanidhi Stalin ,Chennai ,Union Minister ,Udayanidhi Stalin ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்:...