×

கனமழை… வரத்து குறைவு எதிரொலி; கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை உயர்வு: அனைத்து பூக்கள் விலை சரிவு

அண்ணாநகர்: மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்ததால் கோயம்பேடு காய்கறி, பூ, பழங்கள் ஆகிய மார்க்கெட் முழுவதும் வெள்ளம் சூழ்ந்ததால் வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகள் ஏற்றிவரும் வாகனங்கள் அனைத்தும் மார்க்கெட் உள்ளே வர முடியாமல் வெளியே நிறுத்தப்பட்டன. சென்னை மற்றும் புறநகர் சில்லரை வியாபாரிகள் வராததால் வியாபாரம் இல்லாததால் காய்கறிகள் தேக்கம் அடைந்தது.இன்று காலையில் மழை சற்று குறைந்திருந்தபோதும் கோயம்பேடு மார்க்கெட் சாலையில் மழைநீர் தேங்கி உள்ளதால் காய்கறி வாகனங்கள் மார்க்கெட் உள்ளே வர முடியாமல் தவித்தன.

இதன் காரணமாக ஒரு கிலோ பெரிய வெங்காயம் 60க்கும் சின்ன வெங்காயம் 110க்கும் தக்காளி 40க்கும் பீன்ஸ் 50க்கும் வெண்டைக்காய் 45க்கும் பீட்ரூட் 45க்கும் விற்பனை செய்யப்பட்டது. சவ்சவ் 12க்கும் முள்ளங்கி 35க்கும் முட்டைகோஸ் 10க்கும் வெண்டைக்காய் 45க்கும் கத்திரிக்காய் 40க்கும் காராமணி 40க்கும் பாவற்காய் 30க்கும் சுரக்காய் 35க்கும் சேனைக்கிழங்கு 45க்கும் முருங்கைகாய் 90க்கும் காலிபிளவர் 25 க்கும் வெள்ளரிக்காய் 20க்கும் பட்டாணி 50 க்கும் இஞ்சி 90க்கும் பீர்க்கங்காய் 40க்கும் எலுமிச்சைபழம் 90க்கும் நூக்கல் 25க்கும் கோவக்காய் 40க்கும் கொத்தவரங்காய் 40க்கும் குடை மிளகாய் 80க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கோயம்பேடு காய்கறி மார்க்கெட் சிறு, மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் முத்துகுமார் கூறும்போது, ‘’மிக்ஜாம் புயல் காரணமாக 2 நாட்களாக கன மழைபெய்துவந்த நிலையில் காய்கறிகளை வாங்குவதற்கு வியாபாரிகள் வராததால் வியாபாரம் செய்ய முடியாமல் வியாபாரிகள் கடும் வேதனை அடைந்தனர். இன்று காலை வரத்து குறைவால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது’’ என்றார். கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் கடும் சரிவை சந்தித்துள்ளது. ஒரு கிலோ மல்லி, கனகாம்பரம் 700க்கும் ஐஸ் மல்லி 500க்கும் முல்லை, ஜாதிமல்லி 400க்கும் அரளி பூ 150க்கும் சாமந்தி 100க்கும் சம்பங்கி 50க்கும் பன்னீர்ரோஸ் 30க்கும் சாக்லேட் ரோஸ் 40க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

The post கனமழை… வரத்து குறைவு எதிரொலி; கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை உயர்வு: அனைத்து பூக்கள் விலை சரிவு appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,Annanagar ,Mijam ,Dinakaran ,
× RELATED கோயம்பேட்டில் சாலை ஆக்கிரமித்த ஆம்னி பஸ்களுக்கு அபராதம்