×

6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் பெய்து வரும் பருவமழையை தொடர்ந்து வங்கக் கடலில் ஒடிசாவில் இருந்து 320 கிமீ தென்-தென்கிழக்கு, மேற்குவங்கத்தில் இருந்து 460 கிமீ தென் மேற்கு, வங்கதேசத்தில் இருந்து 610 கிமீ தென்மேற்கு பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை ெகாண்டுள்ளது. இது, இன்று மேலும் வலுப்பெற்று புயலாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் இலங்கை அருகே வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது.

அதிகபட்சமாக பொன்னேரியில் 80 மிமீ, சிவலோகம் 70 மிமீ, தக்கலை 60 மிமீ, கும்மிடிப்பூண்டி 50 மிமீ, திற்பரப்பு 40 மிமீ, சென்னை ஆட்சியர் அலுவலகம், சீர்காழி, சோழிங்கநல்லூர், அம்பாசமுத்திரம், திருவிக நகர், தண்டையார் பேட்டை, பெருஞ்சாணி அணை, தேக்கடி, கத்திவாக்கம், மரக்காணம், வில்லிவாக்கம், செய்யூர், மயிலாடுதுறை 30 மிமீ, கொள்ளிடம், மணலி, சாத்தான்குளம், கொளத்தூர், தரங்கம்பாடி, பெரியாறு, திருவொற்றியூர், மாதவரம், சோழவரம் 20மிமீ மழை பெய்துள்ளது.

இதையடுத்து, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதை தொடர்ந்து 19ம் தேதி 8 மாவட்டங்களிலும், 20ம் தேதி 5 மாவட்டங்களிலும் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Meteorological Department ,Chennai ,Tamil Nadu ,Odisha ,West Bengal ,Bay of Bengal ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்...