×

ரூ.20 லட்சம் கையாடல் செய்ய முயற்சி எஸ்ஐ, ரைட்டர் அதிரடி சஸ்பெண்ட்

கோவை: கோவை சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடம் கைப்பற்றிய ரூ.20 லட்சத்தை சப்-இன்ஸ்பெக்டர் யூசுப் மற்றும் தலைமை எழுத்தர் சண்முகசுந்தரம் ஆகியோர் கையாடல் செய்ய முயற்சித்ததாக புகார் சென்றது. இதையடுத்து உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது எஸ்.ஐ, எழுத்தர் ஆகியோர் அந்த பணத்தை ஒப்படைத்துள்ளனர். இதனால் பணத்தை முறைகேடாக அபகரிக்க முயன்ற 2 பேரையும் சஸ்பெண்ட் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று உத்தரவிட்டார்.

The post ரூ.20 லட்சம் கையாடல் செய்ய முயற்சி எஸ்ஐ, ரைட்டர் அதிரடி சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : KOWAI ,YOUSUB ,CLERK SANMUGSUNDARAM ,SINGANALLUR POLICE STATION ,Dinakaran ,
× RELATED கோவை அருகே பொதுமக்களை மிரட்டியது...