×

ஜிஎஸ்டி நிலுவைத் தொகை கிடைக்காமல் தவிக்கும் விசைத்தறியாளர்கள்: கடும் நெருக்கடியில் ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள்

ஈரோடு: செயற்கை இலை நூல்களுக்கு கூடுதலாக வசூலித்த ஜிஎஸ்டி வரியை ஒன்றிய அரசிடம் இருந்து திருப்ப பெற முடியாமல் தவிப்பதாக ஈரோடு விசைத்தறியாளர்காள் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டில் ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமான விசைத்தறி கூடங்கள் இயங்கி வருகின்றனர். இந்த விசைத்தறிகளில் சுமார் 12 லட்சம் கிலோ செயற்கை இலை ரயான் நூல்கள் மூலம் நாள்தோறும் ஒரு கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது.

இதற்காக விசைத்தறி உரிமையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியின் கூடுதல் தொகையை ஒன்றிய அரசு இதுவரை திரும்ப தரவில்லை என்பது இவர்களது கடுமையான குற்றச்சாட்டு. இதனால் கடும் நெருக்கடியில் சிக்கி தவிப்பதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியின் கூடுதல் தொகையை ஒன்றிய அரசு திரும்ப தராததால் ஈரோட்டில் சுமார் 500 விசைத்தறியாளர்கள் தொழிலை விட்டு வெளியேறி விட்டதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 20 தறிகள் வரை வைத்து சொந்தமாக ஜவுளி உற்பத்தி செய்து வந்த பலரும் ஆர்டர் எடுத்து கூலிக்கு நெசவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

The post ஜிஎஸ்டி நிலுவைத் தொகை கிடைக்காமல் தவிக்கும் விசைத்தறியாளர்கள்: கடும் நெருக்கடியில் ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் appeared first on Dinakaran.

Tags : Erode ,Union Government ,Tamil Nadu ,Tirupur ,Salem ,Namakkal ,
× RELATED ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை விலை உயர்வு